நல்லன யாவும் அருளும் நவராத்திரி வழிபாடு

Posted By: Admin, 30 Nov -0001.

நவராத்திரி என்ன பொருள்?நவராத்திரி என்பதை நவ+ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள் உண்டு. ஒன்பது ராத்திரிகள் செய்யவேண்டிய வழிபாடு அல்லது ஒன்பது நாள் இருக்க வேண்டிய விரதம் என்ற பொருளில் இந்தச் சொல் அமைந்துள்ளது. இது நமக்கு புத்தம் புதிய உணர்வுகளைத் தருவதால் இந்த நவ (ஒன்பது) ராத்திரிகள், நமக்கு புதிய (நவ) ராத்திரிகளாக இருக்கின்றன. புதிய கற்பனைகளைத் தருகின்றன. புதிய உத்வேகத்தைத் தருகின்றன. அந்த உற்சாகத்தைப் பெறுவதற்காகவும், புதிய சக்தியைப் பெறுவதற்காகவும் நவராத்திரி ...