குறள் காட்டும் குளங்கள்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல்மனம் குளிரும் வகையில் பல நீதிக் கருத்துகளைச் சொல்லும் வள்ளுவர், அவற்றைச் சொல்லப் பல இடங்களில் குளத்து நீரைப் பயன்படுத்தியிருக்கிறார். நம் மன மாசுகளை அகற்றுகிறது, வள்ளுவர் காட்டும் குளத்து நீர். கரையுள்ள குளம், கரையில்லாத குளம், மலர்கள் பூத்திருக்கும் குளம், கொக்குகள் மீன்களைப் பிடிப்பதற்காகக் காத்திருக்கும் குளம், மனிதர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் குளம் என்று இப்படிப் பலவிதமான குளக் காட்சிகள் வள்ளுவரின் வெளியீட்டுத் திறனைக் கூர்மைப் படுத்தியிருக்கின்றன. ...