மீன் ஏந்தும் மச்ச வாராகி

Posted By: Admin, 30 Nov -0001.

சௌரஷி, புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் தாய் தெய்வ வழிபாடுகளில் ஒன்றாக இருப்பது பன்றிமுகம் கொண்ட பாவையான வாராகிதேவி வழிபாடு ஆகும். பூமியின் வடிவமான வாராகி, பாதாள விஷ்ணுவாராகி, சப்தமாதரில் ஐந்தாவதான வாராகி, லலிதாம்பிகையின் மந்திரியும் படைத் தலைவியுமான வாராகி என பல வாராகியரைக் காண்கிறோம். இங்கே மச்ச வாராகி பற்றியும் அறியலாம் வாருங்கள். இவள் சக்தி கணங்களில் ஒன்றான யோகினியரில் ஒருத்தியாக இருக்கிறாள்.பராசக்தியின் உக்ர வீரதீர பரிவாரங்களில் ஒன்றாக யோகினி கணங்கள் உள்ளனர். இந்த சக்தி கணத்தில் பன்றி முகத்துடனான வாராகி என்னும் பெயரில் பலர் ...