ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை எழுப்பிய மாணிக்கேஸ்வரர் கோயில்!

Posted By: Admin, 30 Nov -0001.

பனையபுரம் அதியமான்உலகின் அரிய பொக்கிஷமாகத் திகழும் தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கியவன் சோழ மன்னன் ராஜராஜ சோழன் என்பது உலகறிந்த செய்தி. இதே காலத்தில் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை பிராட்டியார் அதே கலைநயத்துடன் எழுப்பியுள்ள கலைப் பொக்கிஷமான சிவாலயம் ஒன்று எந்தவித சிதைவுமின்றி புதுப்பொலிவுடன் ஊர்மக்களின் உள்ளார்ந்த பராமரிப்பில் சிறப்பாகத் திகழ்ந்து வருவது வியக்க வைக்கும் தகவல். அந்தக் கோயில் அமைந்திருக்கும் தலம் - தாதாபுரம்.தாதாபுரத்தின் புராதனப் பெயர் ராஜராஜபுரம். ‘வெண்குன்றக் கோட்டத்தின் நல்லூர் நாட்டின் ...