ஆனையின் துயர் போக்கிய ஆழி

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் இந்திரத்யும்னன் எனும் ஒரு அரசன், திருமாலிடம் மிகுந்த பக்தி பூண்டு ஒழுகியவன். ஒருநாள் அவன் வழிபாட்டில் இருந்த வேளையில், அகத்திய முனிவர் வந்தார். வந்த முனிவரை அரசன் கவனிக்கவில்லை. வணங்கவுமில்லை. இதனால் வெகுண்ட அகத்தியர், அரசனை ஆனையாவாய் என்று சபித்துவிட்டார். யானையான அரசன், பொய்கையிலுள்ள அழகிய தாமரை களைக் கொண்டு தினமும் திருமாலை வழிபட்டு வந்தார்.தேவலர் என்னும் முனிவர், தண்ணீரில் நின்று தவம் செய்துகொண்டிருந்தார். ‘ஹு ஹு’ என்னும் கந்தருவன் கர்வம் கொண்டு, மறைந்திருந்து அவருடைய காலைப் பற்றி இழுத்தான். ...