ஜோதிட சாஸ்திரத்தை எப்படி எடுத்துக்கொள்வது?

Posted By: Admin, 30 Nov -0001.

எந்த ஒரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால்தான் அந்த விஷயத்தை நாம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும். நாம் அந்த விஷயத்தில் கரைகண்டவராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், அடிப்படையில் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு கடையில் பொருள் வாங்குகின்றோம் என்று சொன்னால், நாம் பொருளைத் தயாரிப்பவர்களாகவும், விற்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்தப் பொருளின் செயல்பாட்டையும் தரத்தையும் ஓரளவாவது நாம் தெரிந்து கொண்டால்தான், சரியான பொருள்களை, சரியான இடத்தில், ...