ஏற்றம் தரும் ஏகாதசியன்று தரிசிக்க வேண்டிய வேங்கடவன் தலங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

எல்லோருக்கும் திருமலை திருப்பதி வேங்கடவன் கோயில் தெரியும். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு வேங்கடவனின் திருப்பெயரோடு அருளும் சில தலங்களை கொடுத்துள்ளோம். திருமலை திருப்பதி செல்ல முடியாதவர்கள் அவரவர் ஊருக்கு அருகிலுள்ள இத்தலங்களை தரிசிக்கலாம். திருமலை வையாவூர்அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான் வழியே வந்த போது இத்தலத்தினால் கவரப்பட்டார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.