பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் தைப்பூசம்: 5-2-2023தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பாலகனின் கோபம் காரணமாக உருப்பெற்ற இத்தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது. அந்தத் தலவரலாறு பொதுவாக அனைவரும் அறிந்ததே. தனக்குப் பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் கயிலையைவிட்டு வந்தமர்ந்த தலமல்லவா பழநி! சான்றோர் பலரும் அவரின் சினம் நீக்க முயன்றும் முடியாதுபோகவே, பெற்றோரே இத்தலத்தில் பிரசன்னமாகி ‘‘முருகா, நீயே ஒரு ஞானப்பழம்தானே! பழம் நீயே’’ என்று அன்பொழுக கேட்க, முருகனின் மனம் உருகியது. ...